ஆதாரை இணைக்க காலகெடுவே இல்லை... மக்களுக்கு நற்செய்தி சொன்ன சுப்ரீம்கோர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை- வீடியோ

  டெல்லி : ஆதார் எண்ணை செல்போன், வங்கிக்கணக்குடன் இணைக்க எந்த கால அவகாசமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

  ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  SC : Aadhaar linking with bank accounts and mobile phones will stand extended indefinitely

  இந்நிலையில் இன்று மக்களுக்கு ஓர் நற்செய்தியாக வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  அரசின் மானியம் பெறும் சமூக நலத்திட்டங்களுக்கு மட்டும் ஆதார் அவசியம்.
  செல்போன், வங்கிக் கணக்குகளில் இப்போது இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Supreme Court says mandatory Aadhaar linking with bank accounts and mobile phones will stand extended indefinitely till the judgement is pronounced related with the cases.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற