நாரதர் கூகுள்.. சீதை டெஸ்ட் ட்யூப் பேபி.. மகாபாரத காலத்தில் லைவ்..மல்லுக்கட்டும் துணை முதல்வர்!

சீதை சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த முதல் குழந்தை என உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சீதை சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த முதல் குழந்தை என உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவினர் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக் கருத்துக்களை கூறி வருவது தொடர் கதையாகி வருகிறது. பாஜகவினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என பிரதமர் மோடி ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இருப்பினும் பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை நிறுத்துவதுபோல் தெரியவில்லை. அண்மையில் திரிபுரா முதல்வராக பதவியேற்ற பிப்லப் குமார் தேவ் மகாபாரத காலத்திலேயே இணைய தளம் இருந்தது. உலக அழகி பட்டத்துக்கு டயானா ஹைடன் தகுதியானவர் அல்ல. இளைஞர்கள் அரசு வேலையை எதிர்பார்க்காமல், பீடா கடை நடத்த வேண்டும்' உள்ளிட்ட கருத்துக்களை கூறினார்.

உ.பி துணை முதல்வர்

உ.பி துணை முதல்வர்

அவரது கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் பிரதமர் மோடி, பிப்லப் தேவுக்கு அவசர அழைப்பு விடுத்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மகாபாரத காலத்திலேயே ‘லைவ்‘

மகாபாரத காலத்திலேயே ‘லைவ்‘

அப்போது பேசிய அவர் மகாபாரத காலத்திலேயே தொடர் நேரலை தொடங்கிவிட்டதாகவும், மகாபாரதப் போர்க் காட்சிகளை நேரலையில் பார்த்து, திருதராஷ்டிரருக்கு, சஞ்சையன் விளக்கிக் கூறினார் என்பது நாம் அறிந்ததுதான் என்றார்.

நாரதர் கூகுள்

நாரதர் கூகுள்

இதேபோல் நாரதர், தற்போதுள்ள கூகுள் போல அனைத்துத் தகவல்களையும் அறிந்திருந்தார். அந்தத் தகவல்களை அனைத்து இடங்களுக்கும் பரப்பவும் செய்தார் என்றும் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

சீதை டெஸ்ட் ட்யூப் பேபி

சீதை டெஸ்ட் ட்யூப் பேபி

மேலும், டெஸ்ட் ட்யூப் பேபி என்ற கருத்தும் ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. ஸ்ரீராமரின் மனைவியான சீதையின் பிறப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. சீதை, மண் பானையில் பிறந்தார் எனப் பலரும் சொல்ல நாம் கேட்டதுண்டு.

தினேஷ் சர்மா சர்ச்சை பேச்சு

தினேஷ் சர்மா சர்ச்சை பேச்சு

இதன்மூலம், அந்தக் காலத்திலேயே டெஸ்ட் ட்யூப் குழந்தை முறை இருந்தது உறுதியாகியுள்ளது. இவ்வாறு தினேஷ் சர்மா பேசியுள்ளார். உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+