For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பெண்கள் உடல் தெரியாத வகையில் டிரஸ் போடுவதால் பாலியல் குற்றங்கள் குறைவு- ம.பி. அமைச்சர்

Google Oneindia Tamil News

Babulal Gaur
போபால்: சென்னையில் உள்ள பெண்கள் பய பக்தியுடன் கோவிலுக்குப் போகிறார்கள், உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை அணிகிறார்கள். இதனால் அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் பாபுலால் கெளர் கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் சென்னைக்குப் போயிருந்தார் பாபுலால் கெளர். அங்கிருந்து போபால் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை. மாறாக முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான உடைகளை அணிகிறார்கள். கடவுள் பக்தி மிக்கவர்களாக உள்ளனர். பயபக்தியுடன் கோவிலுக்கு தினசரி போகிறார்கள்.

எனவேதான் ம.பி. தலைநகர் போபாலுடன் ஒப்பிடுகையில் தமிழகத் தலைநகரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன.

சென்னையில் 2012ல் பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 19.32 சதவீதம்தான். ஆனால் போபாலில் இது 71.38 ஆக இருந்தது. மேலும் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்திலும் அது 71.38 சதவீதமாக இருந்தது.

சென்னைக்கு நான் போயிருந்தபோது பல மூத்த காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தேன. அவர்கள் என்னிடம் சென்னைப் பெண்கள் உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளையே அணிவது வழக்கம் என்றும், கோவிலுக்கு அடிக்கடி போவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.

இதன் காரணமாகவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தங்களது மாநிலத் தலைநகரத்தில் பெண்களுக்கு எதிரான வக்கிரச் செயல்கள் வெகு குறைவாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

என்னா ஒரு லாஜிக்...!

English summary
Madhya Pradesh Home Minister Babulal Gaur on Sunday said there were few sexual crimes against women in Chennai as they dress up fully and regularly visit temples. Gaur who recently returned from a trip to Chennai said that the crime rate against women in the capital of Tamil Nadu against women was much less than what it was in Bhopal. Gaur said that the rate of crime against women in 2012 in Chennai was 19.32 whereas in Bhopal it was 71.38.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X