பாதாமி தொகுதியில் சித்தராமையா நாளை மறுநாள் வேட்பு மனு- எதியூரப்பா எதிர்த்து போட்டி?

பாதாமி தொகுதியிலும் போட்டியிடும் சித்தராமையா நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முதல்வர் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பாதாமி தொகுதியில் நாளை மறுநாள் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

கர்நாடக தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிட இருக்கிறார்.

Siddaramaiah to file nomination papers from Badami on April 24

சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி அறிவித்திருந்தார். அதேபோல் பாஜக முதல்வர் வேட்பாளர் எதியூரப்பாவும் கட்சி மேலிடம் அனுமதித்தால் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடுவேன் என கூறியுள்ளார். அத்துடன் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட தயார் என பாஜகவின் ஸ்ரீராமுலுவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாதாமி தொகுதியில் சித்தராமையா நாளை மறுநாள் பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+