For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பாசன விவசாயிகளுடன் மார்ச் 8-இல் சித்தராமையா ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 8-ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தவுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 8-ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா அந்த நதியின் பாசன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகியன உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

Siddaramaiah going to discuss with Cauvery irrigation associations

அதில் காவிரி நதியை எந்த ஒரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உத்தரவிட்ட நீரை காட்டிலும் தமிழகத்துக்கு குறைந்த அளவு நீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவு மனதுக்கு சற்று ஆறுதலை தந்தது.

இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது போல் வரும் 7-ஆம் தேதி கர்நாடகத்திலும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வரும் 8-ஆம் தேதி காவிரி பாசன தலைவர்கள், மாவட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், விவசாய சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த சித்தராமையா அடுத்தடுத்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

English summary
Karnataka CM Siddaramaiah going to discuss with Cauvery irrigation heads regarding Cauvery river water dispute and SC's judgement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X