For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாநிலங்கள்... 25 எம்பிக்கள்... தொடங்கியது ராஜ்யசபா தேர்தல்!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    6 மாநிலங்கள்... 25 எம்பிக்கள்... தொடங்கியது ராஜ்யசபா தேர்தல்!

    டெல்லி : ராஜ்யசபாவில் காலியாகும் 58 எம்பிகளில் 25 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. 6 மாநிலங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் எம்பிகளை எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள்.

    நாடு முழுவதும் 16 மாநிலங்களைச் சேர்ந்த 58 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிகிறது. இவர்களுக்கு பதிலாக எம்பிகளை தேர்வு செய்வதற்கான ராஜ்யசபா தேர்தல் இன்று நடக்கி றது. ராஜ்யசபா உறுப்பினர்களை எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.மொத்தமுள்ள 58 எம்பிகள் பதவியிடங்களில் 25 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது, ஏனெனில் எஞ்சிய 33 பேர் 10 மாநிலங்களில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    Six states polling for RS elections begins at 9 AM

    உத்திரபிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலுள்ள தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 எம்பிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கி இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    English summary
    The polling for RS elections in Uttar Pradesh, West Bengal, Karnataka, Jharkhand, Chattisgarh and Telangana. The voting starts and will continue till 4 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X