உளவு பார்த்த விவகாரத்தில் திருப்பம்: எனக்கு தெரிந்துதான் செய்யப்பட்டது.. பாதிக்கப்பட்ட பெண்!
டெல்லி: 2009ம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல்கள் காவல்துறையால் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், அதற்கு அம்மாநில முதல்வர் மோடியின் உத்தரவுதான் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையடுத்து குஜராத் அரசு கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணையை துவக்கியது.
இந்நிலையில் மேலும் ஒரு நீதிபதியை கொண்டு மோடிக்கு எதிரான புகாரை விசாரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதுகுறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து அதுபோன்ற விசாரணையை நடத்தினால் தனது மகளின் அடையாளம் வெளிக்காண்பிக்கப்பட்டுவிடும் என்று கூறி விசாரணைக்கு தடை கோரினார். புகார்தாரரின் கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னை உளவுபார்த்தது சட்டத்துக்கு உட்பட்டா இல்லையா என்பதை விசாரிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: "எனது பாதுகாப்பு உறுதிப்படுத்த விடுக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நானும் எனது தந்தையும் குஜராத் அரசுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். எனக்கும் தெரிந்துதான் எனது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. எனவே இதுகுறித்த அதிகப்படியான விசாரணைகள் எனது தனிமையை கெடுத்துவிடும். எனவே விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் " என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ள உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications