அகமதாபாத் வந்தது உலகின் முதல் 'சோலார் விமானம்'!!
அகமதாபாத்: சூரிய ஒளி சக்தியில் மட்டுமே இயங்கக் கூடிய உலகின் முதலாவது சோலார் விமானம் நேற்று குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியிலிருந்து நேற்று முன்தினம் தனது பயணத்தைத் தொடங்கிய உலகைச் சுற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விமானமான 'சோலார் இம்பல்ஸ் 2' நேற்று நள்ளிரவு குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம் சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க இருக்கிறது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்க உள்ளது.

அந்த வகையில் அபுதாபியிலிருந்து புறப்பட்டு ஓமன் வந்தடைந்த விமானம், ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு அரபிக்கடல் வழியாக 1465 கி.மீ பயணம் செய்து நேற்று இரவு 11.25 மணிக்கு, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்தை இயக்கிய பெர்ட்ரண்ட் பிக்கார்டுக்கு மோனாகோவில் உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்விட்டர் மூலம் வாழ்த்து சொல்லப்பட்டது. அவரையும் அவரது சகவிமானிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

'சோலார் இம்பல்ஸ் 2'-வின் வருகையையொட்டி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் நான்கு நாட்கள் இந்த விமானம் அகமதாபாத்தில் வைக்கப்படும் என்று சுவிஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பின்னர் அங்கிருந்து கிளம்பி வாரணாசியில் சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு மார்ச் 16-ம் தேதி மியான்மருக்குச் செல்லும் தனது பயணத்தின் நான்காவது பகுதியைத் தொடங்க இருக்கிறது.

இந்த விமானத்தில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணம் செய்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் மிக நீண்ட பகுதியாக விமானிகளில் ஒருவர், சீனாவில் இருந்து ஹவாய்க்கு, சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்தை ஐந்து நாட்கள் இரவும் பகலும் இடைவிடாமல் பறந்து கடக்க இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications