For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியும், செவ்வாயும்... சில சுவாரஸ்ய புள்ளி விபரங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: பூமியிலிருந்து செவ்வாய்க்குப் போயுள்ள மங்கள்யான் விண்கலம் குறித்துத்தான் இந்தியா முழுவதும் இன்று காலை முதலே பேச்சாக உள்ளது.

மங்கள்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது. மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடு என்ற சிறப்பும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை பள்ளிக்கூடத்தில் அறிவியல் படித்தபோது இதுகுறித்து நாம் படித்திருக்கக் கூடும். இதோ இப்போது அதைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாமா....

ஆரம்...

ஆரம்...

பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையே அளவில் நிறைய வித்தியாசம் உள்ளது. பூமியின் ஆரமானது 6378 கிலோமீட்டர் ஆகும். அதுவே செவ்வாய் கிரகத்தின் ஆரம் (radius) 3397 கிலோமீட்டர் ஆகும்.

தூரம்...

தூரம்...

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரமானது 14 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 891 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் 22 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்து 637 கிலோமீட்டர் ஆகும்.

வளிமண்டலம்...

வளிமண்டலம்...

பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் நிறைந்திருப்பது நைட்ரஜன்தான். அதாவது 77 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. அடுத்து ஆக்சிஜன். இது 21 சதவீதமாகும். இவை போக நீராவி 1 சதவீதமும், ஆர்கான் 1 சதவீதமும் உள்ளன.

செவ்வாயில்...

செவ்வாயில்...

செவ்வாயின் வளிமண்டலத்தில் அதிகம் இருப்பது கார்பன் டை ஆக்சைடுதான். அதாவது 95.32 சதவீதம் கார்பன் டை ஆக்சைடுதான். நைட்ரஜனின் அளவு 2.7 சதவீதம்தான். ஆக்சிஜனோ வெறும் 0.13 சதவீதம்தான்.

வளிமண்டல அழுத்தம்...

வளிமண்டல அழுத்தம்...

வளிமண்டல அழுத்தமானது பூமியில் 1013 மில்லி பார் அளவில் உள்ளது. அது செவ்வாயில் வெறும் 7.5 மில்லி பார் மட்டுமே.

ஈர்ப்பு விசை...

ஈர்ப்பு விசை...

ஈர்ப்பு விசையின் அளவானது பூமியில் 2.66 ஆகவும், செவ்வாயில் 1 என்ற அளவிலும் உள்ளது.

ஒருநாள் என்பது...

ஒருநாள் என்பது...

பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. செவ்வாயில் அது 24 மணி 37 நிமிடமாக இருக்கும்.

ஒரு வருடம்...

ஒரு வருடம்...

பூமியில் வருடத்திற்கு 365 நாட்களாகும். அதுவே செவ்வாயில் 687 பூமி நாட்களாகும். அதாவது பூமியில் உள்ள 687 நாட்கள் செவ்வாயில் ஒரு வருடத்திற்குச் சமமாகும்.

வெப்பநிலை...

வெப்பநிலை...

பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது சராசரியாக 14 டிகிரி செல்சியஸ் ஆகும். அதுவே செவ்வாயில் மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் ஆகும்.

English summary
The indian space craft Mangalyan has reached the orbit of mars successfully today. The ISRO scientists have created a new history. These are some interesting factors about the two planets Earth and Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X