சோனியா காந்தி உடல் நிலை தேறியது.. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, நலமடைந்ததை தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

விடுமுறையை கழிக்க சிம்லா சென்றிருந்த சோனியா காந்திக்கு திடீர் வயிற்று உபாதை ஏற்பட்டது. இதையடுத்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம், அவர் டெல்லியிலுள்ள கங்காராம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 Sonia Gandhi recovers, discharged from Sir Ganga Ram Hospital

இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சோனியா நலமோடு இருப்பதாக கட்சியின் துணை தலைவரும், மகனுமான ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது நல்ல உடல் நலத்தோடு இருந்ததாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sonia Gandhi condition at the time of discharge was stable and she has been advised rest, says the official release from hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற