For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக வெள்ளம்: சபரிமலையில் சிறப்பு பூஜை - திருவாங்கூர் தேவசம்போர்டு ரூ.40 லட்சம் நிவாரணம்

By Prabhakaran
Google Oneindia Tamil News

ஆரியங்காவு: சென்னை மழை சேதத்திற்கு 40இலட்சம் ரூபாய் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படுகிறது என அதன் தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீள வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள்நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளமாநிலம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிறையார் கோபாலகிருஷ்ணன் இன்றுஆரியங்காவில் நடைப்பெறும் சுவாமி ஐயப்பன் திருக்கல்யாண விழாவுக்கும், அச்சன்கோவில் தேரோட்டத்திற்கு வருகை தந்த அவர் நமது "ஒன் இந்தியா"வுக்கு அளித்த பிரத்தியோக பேட்டி:

Special Poojas for TN Flood Victims at Sabarimala

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பிலும்,பணியாளர்கள்,தேவசம் போர்டு குழு உறுப்பினர்கள் என அனைவரது சார்பிலும் சுமார் 40இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும்,அவர்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீளவும் வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 2016ஆம் ஆண்டு 65கோடி ரூபாய் செலவில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்ய முடிவு செயப்பட்டுள்ளது.அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் இங்கு ஹெலிகாப்டர் இறங்குத்தளம் நிலக்கல்லில் அமைக்க முடிவு செய்யப்பட்டாலும் அதில் நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் உள்ளது. அதனை முதல்வரோடும்,நிர்வாக குழு உறுப்பினர்களோடும் கலந்து பேசி முடிவு செயப்படும், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சரிடமும், இத்திட்டத்தை விரைவாக முடிக்க உறுதுணையாக இருக்க கேரளமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வரவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

English summary
Travancore Devaswom Board president Prayar Gopalakrishnan said special poojas would be conducted at the Lord Ayyappa temple for the people of Tamil Nadu who were in dire straits following the devastating floods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X