உமர் அப்துல்லா கட்சியில் முதல் விக்கெட்.. ஸ்ரீநகர் எம்பி திடீர் ராஜினாமா.. ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி?

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியின் எம்பியான தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த அகா ருஹுல்லா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

srinagar-mp-aga-ruhullah-resign-as-lok-sabha-mp-from-omar-abdullah-national-conference-party

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இருந்து வருகிறது. இவரது கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் அகா ருஹில்லா. இவர் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியின் எம்பியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் அகா ருஹில்லா இன்று தேசிய மாநாட்டு கட்சியை விட்டு விலகுவதாகவும், தனது லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டம் பிஹிஸ்தி ஜெக்ரா பார்க்கில் நடந்த கூட்டத்தில் அகா ருஹில்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி உமர் அப்துல்லாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ''உமர் அப்துல்லா திறமையற்ற தலைவர். அவரால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370யை திரும்ப கொண்டுவருவது, ஆண்டுக்கு 12 இலவச கியாஸ் சிலிண்டர் வழங்குவதல், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அகா ருஹில்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 24 ஆண்டுகளாக உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியில் பயணித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே தேசிய மாநாட்டு கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.

குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370யை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதற்கு அகா ருஹுல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். கடந்த 2024 சட்டசபை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா முதல்வரானார்.

அதன்பிறகு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பெற்று தருவார் என்று நம்பினார். ஆனால் அந்த விஷயம் தற்போது வரை நடக்கவில்லை. உமர் அப்துல்லா அதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் தனியாக மீட்டிங் நடத்தி உள்ளனர். சிலரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் உமர் அப்துல்லாவால் ஜம்மு காஷ்மீரில் முதல்வராக இருக்க முடியாது.

இதற்கிடையே தான் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியில் முக்கிய தலைவராக இருக்கும் அகா ருஹுல்லா திடீரென்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த அதிருப்தியாளர்களுடன் தனி அணியாக இவர் செயல்பட உள்ளாரா? அப்படி செயல்பட்டால் ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவின் ஆட்சி கூட கவிழலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+