For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய வீரர்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிட 'தடை' -ராணுவம் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸை ராணுவ வீரர்கள் சாப்பிட வேண்டாம் என்று இந்திய ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மசாலா உணவுப் பொருளில் காரீயம், மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகிய வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

Stop eating Maggi noodles, Indian army advises personnel

இதையடுத்து அந்த மாநிலத்தில் நெஸ்லே நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் மேகி நூடுல்ஸை சாப்பிட வேண்டாம். ராணுவ கேன்டீன்களிலும் நூடுல்ஸை விற்பனை செய்யவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Army on Wednesday issued an advisory asking its personnel not to consume Maggi noodles and directed military canteens to set aside the existing stock of the popular snack until further orders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X