For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்கு: சு.சுவாமி கிண்டல்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகளே உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நோட்டா உடன் போட்டி போடும் பாஜக- வீடியோ

    டெல்லி: மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவ, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

    ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் , பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று முதல் தினகரனே முன்னிலையில் உள்ளார்.

    Subramanian swamy says about BJP vote bank in TN

    இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சற்று அதிகரித்து முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் பாஜகவோ நோட்டாவை காட்டிலும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

    இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நோட்டாவை விட வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது. இது பொறுப்புணர்வுக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில நாள்களுக்கு முன்னர் சொந்த கட்சி வேட்பாளர் கரு நாகராஜனை ஆதரிக்காமல் டிடிவி தினகரனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறி பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.

    அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் டிடிவி தினகரனே வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தனது கட்சியின் வாக்கு வங்கி குறைவாக உள்ளது என்பது குறித்து அவரே டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    English summary
    Subramanian swamy says that TN BJP record: A national ruling party gets a quarter of NOTA’s vote. Time for accountability.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X