தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவே் கிடைக்காது... சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம்
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Recommended Video

நெல்லை: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசோ வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்த பதிலும் வரவில்லை
அவரும் சந்திப்புக்கான நேரம் வழங்குவது பரிசீலனை செய்து வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை அதற்கு கர்நாடக அரசு தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி
இதனால் காவிரி விவகாரத்தில் நாளை புதிய வழக்கை தொடர தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் செய்வேன்
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கவே கிடைக்காது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் என்னிடம் கேட்டால் நான் ஏற்பாடு செய்வேன்.

இத்தாலியில் இருந்து
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இத்தாலியில் இருந்து என்னால் 3 மாதத்தில் கொண்டு வரமுடியும். அடுத்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அடுத்த ஆண்டு ராமர் சேது பாலம் மூலம் இலங்கைக்கு நடந்தே செல்ல முடியும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட முடியாது என்று அந்த மாநில அமைச்சர் பாட்டீல் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications