Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 தமிழர் விடுதலை மறுப்பு.. சு.சாமி வரவேற்பு.. இத்தாலியில் முக்கிய குற்றவாளி இருப்பதாக ட்வீட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு நிராகரிப்பு- வீடியோ

    டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதை பாஜக சீனியர் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Subramanian Swamy welcomes president decision on Rajiv killers

    இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து டுவிட்டரில் சு.சாமி கூறுகையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துவிட்டார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிருஷ்டசாலிகள். இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சு.சாமி தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+