5 ஆண்டு வறட்சி.. தவித்த இந்தியா - போக்கிய “ஸ்கை”யின் சிக்சர் மழை.. இனி 4வது பேட்ஸ்மேன் “நோ டென்சன்”
கவுஹாத்தி: இந்திய அணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 4 வது பேட்ஸ்மேனுக்கான இடம் நிரப்ப முறையான வீரர் கிடைக்காத நிலையில், அதற்கான விடையாக கிடைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டரில் ஓபனராக நிலையான இடத்தை பிடித்துவிட்டார் கேப்டன் ரோகித் ஷர்மா. அவருடன் கே.எல்.ராகுல் அல்லது ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக மாறி மாறி விளையாடி வருகிறார்கள்.
எனவே இந்திய அணியில் ஓபனிங் பேட்டிங்கில் அதிக சிக்கல் இல்லை. அடுத்ததாக இந்திய அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 3 வது பேட்ஸ்மேனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் கேப்டன் விராட் கோலி.
எனவே இந்திய அணியின் இந்த டாப் ஆர்டர் எப்போதுமே வலுவாக இருக்கிறது. அடுத்ததாக 5, 6, 7 வது இடங்களில் தோனி ஓய்வுக்கு முன் அவர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். தோனி ஓய்வுபெற்ற பின் அந்த இடம் ரிஷப் பண்டுக்கு கிடைத்தது.

4 வது பேட்ஸ்மேன்
ஆனால், யுவராஜ் சிங் பேட்டிங் செய்த 4 வது இடத்தில் அவருக்கு பதில் வேறு எந்த எந்த வீரரும் பொருந்திப்போகவில்லை. சுரேஷ் ரெய்னா இருக்கும் வரை அவர் சற்று அந்த இடத்தில் விளையாடி சமாளித்தாலும், பின்னர் ஃபார்ம் அவுட் ஆகி அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பிறகு பல வீரர்களுக்கு அந்த இடத்தில் இந்திய அணி வாய்ப்பு வழங்கியது.

சொதப்பிய வீரர்கள்
மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் என பல வீரர்களை சோதனை முறையில் இந்திய அணி 4 வது பேட்டிங்கிற்கு முயற்சித்தது. ஆனால், அனைவரும் சொத்தப்பவே செய்தார்கள். விஜய் சங்கர் மட்டும் ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியதால் உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தேடி வந்த வாய்ப்பு
ஆனால், அதில் அவர் சொதப்பியதால் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை பேரை சோதனை செய்த பிறகு, இந்திய அணியில் தனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ரன் பசியில் காத்திருந்த அந்த வீரருக்கு தேடி வந்தது வாய்ப்பு. அவர் பெயர்தான் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பை பெற்றார் அவர்.

நிரூபித்த சூர்யகுமார்
இவரை ஏன் இவ்வளவு நாளாக தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வருத்தப்படும் அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்து வரும் சூர்ய குமார் யாதவ், கடைசி 3 டி20 போட்டிகளிலும் அரைசதம் விளாசி 4 வது இடத்திற்கு என்னை விட தகுயான பேட்ஸ்மேன் வேறு யாருமில்லை என்ற எண்ணை அனைவர் மனதிலும் ஆழமாக விதைத்தை இருக்கிறார்.

இந்திய அணியின் நம்பிக்கை
இதற்கு முன் 4 வது இடத்தில் கோலோச்சிய யுவராஜ் சிங்கிடம் இருக்கும் அதிரடி ஆட்டம் சூர்யகுமார் யாதவிடம் இருக்கிறது. உலகின் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்ட ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளை துவம்சம் செய்து வரும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி அடுத்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்வார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications