For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரக்யா தாக்கூருக்கு வந்த மர்ம கடிதம்.. மோடி, அமித்ஷா, தோவல் படங்களை குறி வைத்ததால் பரபரப்பு

Google Oneindia Tamil News

போபால்: போபால் எம்பி பிரக்யா தாக்கூரின் வீட்டுக்கு வந்த மர்ம கடிதம் மற்றும் பவுடர் போன்ற பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போபால் எம்பியாக இருப்பவர் பிரக்யா தாக்கூர். இவர் கோட்சேவை தேசப்பற்றுமிக்கவர் என கூறி நாடாளுமன்றத்தில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டார்.

பிரக்யா தாக்கூரின் போபாலில் உள்ள வீட்டுக்கு மர்ம கடிதமும் , அதில் பவுடர் போன்ற ஒரு பொருளும் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடிதத்தை பிரக்யாவின் ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

கிராஸ் குறியீடு

கிராஸ் குறியீடு

அந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படங்களில் கிராஸ் குறியீடு இருந்தது.

நிச்சயமாக

நிச்சயமாக

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடிதத்தில் இருந்த பவுடர் தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரக்யா தாக்கூர் கூறுகையில் இந்த கடிதத்தை நிச்சயமாக தீவிரவாதிகள்தான் அனுப்பியிருப்பர்.

போலீஸ் வழக்கு

போலீஸ் வழக்கு

ஆனால் இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்றார். இதைத் தொடர்ந்து போபால் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போபால் பல்கலைக்கழகம்

போபால் பல்கலைக்கழகம்

போபால் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்களின் போராட்டத்தை பேசி சமாதானப்படுத்த பிரக்யா தாக்கூர் சென்றிருந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், தீவிரவாதியே திரும்பி போ என முழங்கினர். அது போல் விமானத்தில் வீல் சேரில் வந்த பிரக்யா தாக்கூர் அவசர கதவு அருகே உட்கார்ந்து கொண்டு இடத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என அடம்பிடித்தார். இதுபோன்ற ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் பிரக்யா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suspicious letter and powder like substance has been sent to Bhopal MP Pragya Thakur's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X