For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல் பயம்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது: இதுவரை ரூ.5,500 கோடி இழப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: பன்றிக்காய்ச்சல் பலிகள் நாடுமுழுவதும் அச்சுறுத்திவருகிறது. உள்ளுர்வாசிகளை மட்டுமல்ல பன்றிக்காய்ச்சல் வெளிநாட்டு பயணிகளையும் அச்சுறுத்திவருகிறது.

ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்துள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து போனது. இதன்காரணமாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து தொழில்துறைக்கு சுமார் ரூ.5,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான, ‘அசோசெம்' தெரிவித்துள்ளது.

Swine flu will hit tourism

பலி எண்ணிக்கை

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 12ம் தேதி வரை நாடு முழுவதும் 485 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ராவிலும் உயிரிழப்பு அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள்

இந்நிலையில், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கொண்டுள்ள ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கும் குளிர்காலத்தில் மட்டும் சுமார் 2 முதல் 2.5 லட்சம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பன்றிக்காய்ச்சல் தான்.

ரூ.5,500 கோடி இழப்பு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததன் மூலம் இரு மாநிலங்களுக்கும் சுற்றுலா, விமான போக்குவரத்து தொழில்துறைக்கு வரவேண்டிய சுமார் ரூ.5,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் குறிப்பிட்டுள்ளது.

English summary
The swine flu outbreak in Rajasthan and Maharashtra is expected to cause tourism and aviation a loss of Rs.5,500 crore, according to an Assocham assessment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X