திமுக தயவில் 10 ஆண்டு பதவி சுகம் அனுபவித்த காங்கிரஸ்… டி.ஆர்.பாலு பதிலடி
டெல்லி: மத்தியில் பத்து ஆண்டுகள் திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி நடத்தியது என்று திமுகவின் மூத்த தலைவரும் தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
திமுக ஒரு நன்றி மறந்த கட்சி என்றும், ஐந்தாண்டுகள் காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தியது என்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு பற்றியும், ஆ.ராஜா பற்றியும் அவர் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்திருந்தார் அதற்கு பதிலடி தரும் விதமாக டி.ஆர்.பாலு கருத்து கூறியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ், இப்போது என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்? அவரது கருத்துக்கள் தேவையற்றது, அடிப்படை ஆதாரமற்றது.
2009 ம் ஆண்டு திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த காரணத்தினால்தான் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. அதற்கும் முன்பும் திமுகதான் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தது.
பத்தாண்டு காலம் திமுகவின் தயவில்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்ய முடிந்தது.
சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிதான் நன்றி மறந்து செயல்படுகிறது என்றும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நான் அமைச்சராக இருந்த போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் நாடுமுழுவதும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளொன்று 7 முதல் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. இதெல்லாம் ஜெய்ராம் ராமேஷிற்கு தெரியுமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதில் இருந்து இரு கட்சித்தலைவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் உடனான கூட்டணியை மறக்க நினைக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications