டெல்லி ஜே.என்.யு. பல்கலையில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆராய்சி படிப்பு (நவீன வரலாறு) பயின்று வரும் சேலத்தைச் சேர்ந்த முத்துக் கிருஷ்ணன் என்ற மாணவர் திங்கள்கிழமை தனது நண்பரின் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

tamilnadu student suicide at JNU

இந்தநிலையில் முத்துக்கிருஷ்ணன் நண்பர்கள் அறையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனிடையே எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக முத்துகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கிடைக்க போராடிவரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களை முத்துகிருஷ்ணன் முன்னெடுத்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முத்துக்கிருஷ்ணனின் மரணம் குறி்த்து அவரது தந்தை ஜீவானந்தம் கூறுகையில்,  எனது மகன் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பில்லை. தற்கொலை செய்யும் அளவிற்கு அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் பேசும் போது தேர்வு நன்றாக எழுதி உள்ளதாகவும், அடுத்த வாரம் ஊருக்கு வருவதாகவும் போனில் பேசியதாக கூறினான் என்றார்.

இதனிடையே முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு நீதி கேட்டு சேலம் 5 ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu student commits suicide at delhi JNU

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற