கூலி வேலைக்கு சென்ற தெலுங்கானா சி.எம். மகன்: ஐஸ்க்ரீம் விற்று ரூ.7.5 லட்சம் சம்பாதித்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வரின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்று ரூ. 7.5 லட்சம் சம்பாதித்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சியின் கூட்டத்திற்கு நிதி திரட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குறைந்தது இரண்டு நாட்களுக்கு கூலி வேலை செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

இதையடுத்து கே. சந்திரசேகர் ராவின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

ஐஸ் க்ரீம் பார்லர்

ஐஸ் க்ரீம் பார்லர்

ஹைதராபாத்தில் உள்ள குதுபுல்லாபூரில் இருக்கும் ஐஸ் க்ரீம் பார்லரில் வெள்ளிக்கிழமை கூலி வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். அவர் ஐஸ் க்ரீம் விற்க வந்துள்ளதை அறிந்து அரசியல் தலைவர்கள் அந்த கடையில் குவிந்தனர்.

விற்பனை

விற்பனை

கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்பனை செய்து ரூ. 6 லட்சம் சம்பாதித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. மல்லா ரெட்டி ஒரு ஐஸ்க்ரீமை ரூ. 5 லட்சத்திற்கு வாங்கினார். அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்ரீனிவாஸ் ரெட்டி ரூ. 1 லட்சம் கொடுத்து ஐஸ்க்ரீம் வாங்கினார்.

ஜூஸ்

ஜூஸ்

ஐஸ்க்ரீம் கடையை அடுத்து ஜூஸ் கடைக்கு வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். ஜூஸ் கடையில் அவர் ரூ. 1.30 லட்சம் சம்பாதித்துள்ளார். அங்கும் அரசியல் தலைவர்களால் தான் வியாபாரம் நடந்துள்ளது.

கட்சி கூட்டம்

கட்சி கூட்டம்

கட்சி துவங்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக வரும் 27ம் தேதி வாரங்கலில் நடிக்கும் கூட்டத்திற்கு தான் இப்படி கூலி வேலை செய்து சம்பாதிக்கிறார்களம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Telangana Chief Minister K Chandrasekhar Rao's son and cabinet minister KT Rama Rao earned Rs 7.5 lakh in a couple of hours by selling ice-cream and fruit juice in Hyderabad.
Please Wait while comments are loading...