For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் 6வது கண் கார்ட்டோசாட்.. பூமியின் படங்களை அனுப்பி அசத்தல்!

விண்வெளியில் இருந்தபடி பூமியின் படங்களை கார்ட்டோசாட் செயற்கைக்கோள் எடுத்து அனுப்பப தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் இருந்தபடி பூமியின் படங்களை கார்ட்டோசாட் செயற்கைக்கோள் எடுத்து அனுப்பப தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி கத்தாரின் தோகா, எகிப்தின் அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட நகரங்களையும் இந்த செயற்கைக்கோள் பிடம் எடுத்து அனுப்பியுள்ளது.

கார்டோசாட் 2இ செயற்கைக்கோள் கடந்த 23ஆம் தேதி பிஎஸ்எல்வி கார்ட்டோசாட்-2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 30 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

160 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

பணியை தொடங்கிய கார்ட்டோசாட்

பணியை தொடங்கிய கார்ட்டோசாட்

அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கார்ட்டோசாட் 2இ செயற்கைக்கோள் 26ஆம் தேதி முதல் தனது பணியை தொடங்கியுள்ளது.

இந்தியாவின் 6வது கண்

இந்தியாவின் 6வது கண்

இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் 6வது கண் என அழைக்கப்படுகிறது. விண்வெளியில் இருந்தபடியே பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளது

பூமியை படம்பிடித்து அனுப்பியுள்ளது

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிஷாகார்ஹ் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகர் மற்றம் கத்தாரின் தோகா உள்ளிட்ட நகரங்களையும் கார்ட்டோசாட் செயற்கைக்கோள் பலகோணங்களில் படம் பிடித்து அனுப்பியுள்ளது. விண்ணில் செலுத்திய 3 நாட்களிலேயே செயற்கைக்கோள் தனது பணியை தொடங்கியுள்ளது.

Recommended Video

    இஸ்ரோவின் டிவிட்டர்

    இஸ்ரோவின் டிவிட்டர்

    இந்த படங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார்ட்டோசாட் செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Cartosat -2 series satellite for earth observation, also known as India's 'sixth eye in the sky', has sent back its first images to the Earth.The Indian Space Research Organisation (ISRO) shared the spectacular images from Cartosat-2 on its official Twitter account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X