Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிரியர்களை மிரட்ட.. பள்ளி வராண்டாவில் கையில் அரிவாளுடன் வலம் வந்த தலைமை ஆசிரியர்.. பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கையில் அரிவாளுடன் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புத்தத்தை ஏந்தி மாணவர்களுக்கு படிப்பை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் வீச்சரிவாளுடன் வந்தது சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் கச்சார் மாவட்டத்தில் கனகபூர் என்ற இடம் உள்ளது.

இந்தப் பகுதியில் ராதமாதேப் புனியாடி என்ற துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்

பள்ளி தலைமை ஆசிரியர்

கடந்த சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கி கொண்டு இருந்தது. மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து கேட்டு எழுதிக்கொண்டு இருந்தனர். அப்போது, பள்ளிக்கு தலைமை ஆசிரியர் திரிதிமேதா தாஸ் என்பவர் வருகை தந்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கையில் ஒன்றை வைத்திருப்பதை சிலர் கவனித்தனர். எனினும், பிரம்பு போன்ற எதையாவது ஆசிரியர் வைத்திருக்கலாம் என்று பலரும் நினைத்து இருந்தனர்.

கையில் வீச்சருவாளுடன்

கையில் வீச்சருவாளுடன்

ஆனால், அருகில் வரும் போதுதான் அவர் கையில் வீச்சருவாளுடன் வந்தது தெரியவந்தது. இதைப் பார்த்த ஆசிரியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும் இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், தலைமை ஆசிரியர் திரிதிமேதா தாஸை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு சில ஆசிரியர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றும் இதனால், கோபமும் விரக்தியும் அடைந்தேன்.

ஆசிரியர்களுக்கு பாடம் புகட்ட

ஆசிரியர்களுக்கு பாடம் புகட்ட

என்னை கோபம் அடைய வைத்த ஆசிரியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை எச்சரிப்பதற்காக அரிவாளை கொண்டுவந்தேன் என்று போலீசாரிடம் தெரிவித்தார். ஆசிரியர் திரிமேதா தாஸுக்கு எதிராக பள்ளி ஆசிரியர்களோ அதிகாரிகளோ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், அவரை போலீசார் கைது செய்யவில்லை. எச்சரித்து விட்டு விடுவித்தனர்.

இணையத்தில் பரவும் வீடியோ

இணையத்தில் பரவும் வீடியோ

எனினும், கல்வித்துறை அதிகாரிகள் திரிமேதி தாசை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். கையில் புத்தகத்துடன் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் வீச்சரிவாளுடன் வந்தது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பெற்றோர்கள், கல்வியாளர்கள் கலங்கி போய் உள்ளனர்.

கல்வியாளர்கள் வேதனை

கல்வியாளர்கள் வேதனை

துவக்க பள்ளியில் பயிலும் சிறுவர்கள் முன்னிலையில், அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர் இப்படி நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் சிறுவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை கொடுத்துவிடாதா? என்றும் கல்வியாளர்கள் பலர் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். மேலும், ரவுடி போல செயல்பட்ட ஆசிரியரை இடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+