தற்கொலைக்கு முன்னர் முகநூலில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் என்ன கூறியிருந்தார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலைக்கு முன்னர் முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

 The TN student of JNU has posted a comment in FB before suicide

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு மேற்கொண்டவர் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் முனிர்க்காவில் உள்ள தனது நண்பனின் அறைக்கு ஹோலி கொண்டாட சென்றார்.

பின்னர் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், அவரது நண்பர்கள் வெகுநேரமாக அறையை தட்டியும் திறக்காததால், போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, முத்துக்கிருஷ்ணன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி முத்துக்கிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் சமத்துவமில்லை என்றும் ஆய்வு மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதில்ப திவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Salem student of Delhi JNU has expressed his views in Facebook before he suicide.
Please Wait while comments are loading...