ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியாகும் செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இணையத்தில் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், 4 பொது மக்கள் பலியானார்கள்.

எப்படி
இதில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில தீவிரவாத அமைப்புகளும் தொடர்ந்து தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பொது மக்கள் படுகாயம் அடைந்தனர்.

இன்று
இந்த நிலையில் இன்றும் நக்ரோட்டா பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதனால் மிகப்பெரிய ராணுவ ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. குளிர்காலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவமும் அந்நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்ப முயல்வதாக புகார் எழுந்துள்ளது.

தகவல்
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தி வருகிறதுஎன்று தகவல்கள் வந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

நடக்கவில்லை
எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் தாக்கியதாக வெளியாகும் செய்திகளுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications