For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருக்கு.. "கொஞ்சூண்டு" சகிப்புத்தன்மையின்மை இருக்கு.. சொல்கிறார் வெங்கையா!

Google Oneindia Tamil News

டெல்லி: சகிப்புத்தன்மையின்மை நாட்டின் லேட்டஸ்ட் விவாதப் பொருளாகி உள்ள நிலையில் சகிப்புத்தன்மை இல்லை என்று அறவே கூற முடியாது. கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார் நாயுடு. இருப்பினும் இதை அடையாளம் கண்டுகொண்டு அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

சிறிதளவே உள்ள சகிப்புத்தன்மையின்மையை பெரிதுபடுத்தி பொதுப்படையாக்க அரசு விரும்பவில்லை என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இதுகுறித்து அவர் கூறியதாவது:

சமூகத்தில் சிறிய அளவில் சகிப்புத்தன்மையின் இருப்பது உண்மைான். பல்வேறு மட்டங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அது சிறிய அளவுதான். அதை பெரிதுபடுத்தி பொதுப்படையாக்கக் கூடாது. அதை அரசு விரும்பவில்லை.

மோடி வந்த பிறகு எல்லாமே வரவில்லை

மோடி வந்த பிறகு எல்லாமே வரவில்லை

ஏதோ மோடி பிரதமரான பின்னர்தான் அத்தனை பிரச்சினையும் ஒரே இரவில் வந்து விட்டது போல பேசுவது தவறாகும். இவையெல்லாம் நீண்ட காலமாக நடந்து கொண்டுதான் உள்ளன.

பெரிதுபடுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும்

பெரிதுபடுத்துபவர்களை புறக்கணிக்க வேண்டும்

தேவையில்லாமல் பிரச்சினைகளைப் பெரிதுபடு்த்துபவர்களை அனைவரும் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும், அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களை ஒதுக்க வேண்டும்.

ப.சி கருத்து சரியே

ப.சி கருத்து சரியே

சல்மான் ருஷ்டியின் சாத்தானிக் வெர்சஸ் நூலுக்கு காங்கிரஸ் அரசு தடை விதித்தது தவறு என்று ப.சிதம்பரம் கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இரண்டு விஷயம் இருக்கிறது. ஒருவர் நூல் எழுதுகிறார் என்றால் அது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத அளவுக்கு இருக்க வேண்டும். அது வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கக் கூடாது. அதேசமயம், கருத்துச் சுதந்திரத்தையும் நாம் மதிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும்.

சகிக்கும் மனப்பான்மை வளர வேண்டும்

சகிக்கும் மனப்பான்மை வளர வேண்டும்

ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்க முயல வேண்டும். ஒருவரின் கருத்தை மற்றவர் மதிக்க வேண்டும். அதேபோலத்தான் மோடி அரசுக்கு மக்கள் அளித்த தீர்ப்பையும் மதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எக்ஸ்.. மேற்கு வங்கத்தில் ஒய்

தமிழ்நாட்டில் எக்ஸ்.. மேற்கு வங்கத்தில் ஒய்

தமிழ்நாட்டில் எக்ஸ்.. மேற்கு வங்கத்தில் ஒய்

English summary
Parliamentary Affairs Minister M Venkaiah Naidu today said there was "some amount" of intolerance in the society which has to be identified and dealt with firmly, instead of generalising it. Without referring to any particular incident, Naidu participating in the debate in Rajya Sabha, said people making out of turn statements should be condemned, isolated and disowned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X