கூட்டணிக்கு சான்ஸே இல்லை.. காங்.குக்கு மட்டுமே ஆதரவு.. பாஜகவுக்கு கதவை அடைத்தார் குமாரசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கூட்டணிக்கு சான்ஸே இல்லை.. காங்.குக்கு மட்டுமே ஆதரவு- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

  கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 108 இடங்களும், காங்கிரஸ் 78 இடங்களும், மஜத கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றது.

  ஆட்சி அமைக்க 112 எம்எல்ஏக்கள் தேவை. இதை எந்த ஒரு கட்சியும் பெறவில்லை. எனவே பாஜகவின் பார்முலாவை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.

  டீல் ஓகே

  டீல் ஓகே

  அதன்படி ஜேடிஎஸ் கட்சியிடம் காங்கிரஸுக்கு ஆதரவளித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று டீல் பேசியது. கிங்காகும் வாய்ப்பு தானாகவே வரும் நிலையில் இந்த டீலுக்கு ஜேடிஎஸ்ஸும் ஒப்புதல் அளித்து விட்டது.

  தனித்தனியாக

  தனித்தனியாக

  இந்த நிலையில் பாஜகவும் ஜேடிஎஸ்ஸை வலைத்து போட குமாரசாமியிடம் பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவடேகரை தூது அனுப்பியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று தனித்தனியாக நடைபெறுகிறது.

  கூட்டணியெல்லாம் கிடையாது

  கூட்டணியெல்லாம் கிடையாது

  இந்த கூட்டத்துக்கு வருகை தந்த ஜேடிஎஸ்ஸின் தலைவர் குமாரசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.

  காங் கூட்டணி

  காங் கூட்டணி

  ஏற்கெனவே பேசி முடிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த விரக்தியில் குமாரசாமியுடன் டீல் பேச சென்ற பிரகாஷ் ஜாவடேகர் கூறும் போது பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் விரும்புவது சரியல்ல என்றார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  JDS chief Kumarasamy says that there will be no question of going with BJP. As per discussion, we go with Congress.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற