For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் ரமலான் நோன்பு வைக்கும் இந்துக்கள்: இது தாங்க மதநல்லிணக்கம்

By Siva
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து இந்து சமூகத்தினரும் புனித ரமலான் நோன்பிருந்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மற்றும் ஜெய்சல்மர் மாவட்டங்களில் இருக்கும் பல கிராமங்களில் இஸ்லாமியர்கள் தீபாவளி கொண்டாடுவதுடன் பஜனை பாடல்கள் பாடுகிறார்கள். சில இஸ்லாமியர்கள் தங்களின் இந்து நண்பர்களோடு சேர்ந்து விநாயகரை வழிபடுகிறார்கள்.

These hindus in Rajasthan keep roza in Ramadan

இந்நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் இந்துக்கள் இஸ்லாமிய நண்பர்களோடு சேர்ந்து புனித ரமலான் நோன்பிருந்து வருகிறார்கள். நோன்பு வைப்பதோடு மட்டும் அல்லாமல் சில இந்துக்கள் 5 நேரம் நமாஸ் செய்கிறார்கள்.

பார்மர் மற்றும் ஜெய்சல்மர் மாவட்டங்களில் வசிக்கும் இந்துக்களில் பலர் பிரிவினை நடந்தபோது பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தவர்கள். அவர்கள் பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் வசித்தவர்கள்.

இது குறித்து கோஹத் கா தாலா கிராமத்தை சேரர்ந்த டாக்டர் மேகாராம் கத்வீர் கூறுகையில்,

இங்கு நாங்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்கள் போன்று பழகுவோம். நாங்கள் எங்கள் இரண்டு மதங்களின் பண்டிகைகளையும் பேதமின்றி கொண்டாடுவோம். பாகிஸ்தானில் இருந்து வந்தாலும் நம் சடங்கு சம்பிரதாயங்களை பலர் பின்பற்றுகிறார்கள் என்றார்.

English summary
Hindus living in many villages of Barmer and Jaisalmer districts in Rajasthan keep roza(fast) in the holy month of Ramadan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X