ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்டு விபத்து.. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. செகந்திரபாத்தில் இருந்து ஷாலிமார் சென்ற பயணிகள் ரயில் நல்பூர் அருகே விபத்துக்குள்ளானது. 3 பெட்டிகள் தடம்புரண்டது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஷாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 22580) இயக்கப்பட்டு வருகிறது. செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் நல்பூர் அருகே வந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வண்டியின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "செகந்திராபாத் ஷாலிமார் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 5.30 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் கேரக்பூர் மாவட்டம் நல்பூர் அருகே வந்துகொண்டிருந்தது. நல்பூர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. 3 பெட்டிகள் தடம்புரண்டன. பயணிகள் யாருக்கும் இதுவரை எந்த உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை" என்று கூறினர்.
ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளன. ரயில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த பயணிகளை தாங்கள் செல்லும் இடத்திற்கு செல்வதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications