தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ

டெல்லி: தமிழம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர், நாகை மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழை மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழைக்கு வாய்ப்பு

மிக கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழையில் இருந்து மிக கனமழை பெய்யும் என என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் வாய்ப்பு

இடி மின்னலுடன் வாய்ப்பு

ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்தள்ளது. நவம்பர் 3ஆம் தேதியான நாளை தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.5,6ல் மழை இருக்காது

நவ.5,6ல் மழை இருக்காது

நவம்பர் 4ஆம் தேதியான நாளை மறுநாள் தமிழகம் , புதுச்சேரி, தெற்கு ஆந்திரா மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் நவம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy to very heavy rain at isolated places very likely over Tamilnadu and Puducherry and Kerala.Thunderstorm accompanied with lightning very likely at isolated places over South Coastal.Andhra Pradesh, Tamilnadu and Puducherry, Kerala and Rayalaseema.
Please Wait while comments are loading...