For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி....கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்!

திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரியாக பஞ்சாபை சேர்ந்த அனில் குமார் சிங்கால் என்பவரை நியத்துள்ளது ஆந்திர அரசு. அவருடைய நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலைச் சேர்ந்த

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தலையிலும் கைய வைத்துவிட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புலம்பும் வகையில், திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரியாக தெலுங்கு தெரியாத பஞ்சாப் மாநிலத்தவரை நியமித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அனைத்து நிர்வாகமும் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கோயில்களில் அதிக வருமானத்தையும் நிறைய பக்தர்களையும் பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

 Tirupati Devasdhanam board CEO nimaination getting problem

வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்தக் கோயிலில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம். 'திருப்பதிக்கு சென்றால் திருப்பம் ஏற்படும்' என்ற நம்பிக்கையின் காரணமாக மக்கள் கூட்டம் இங்கு அதிகமிருக்கும்.

மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப திருப்பதி தேவஸ்தானமும் பகதர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட பல வசதிகளை செய்துகொடுத்துள்ளது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஆந்திராவைச் சேர்ந்த சாம்பசிவ ராவ் என்பவரை அந்த பதவியிலிருந்து மாற்றி தெலுங்கு எழுதவோ, பேசவோ தெரியாத அனில்குமார் சிங்கால் என்பவரை அப்பதவிக்கு ஆந்திர அரசு நியமித்துள்ளது.

இந்த அதிகாரி மாற்றத்தை தேவஸ்தானத்தில் உள்ள ஒருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் தெலுங்கு எழுதவோ பேசவோ தெரியாத ஒருவரால், திருப்பதி தேவஸ்தானத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? இது வேண்டுமென்றே தேவஸ்தானத்துக்கு சிக்கலை ஏற்படுத்த கொண்டு வந்த மாற்றம் என தேவஸ்தான ஊழியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அனில்குமார் சின்ஹாவின் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக திருப்பதி ஏழுமையான் கோயிலைச் சேர்ந்த சொரூபானந்தா ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

English summary
Andra government appoints Anilkumar sinhal as EO of tirupati devasdhanam board creates issues among other oficials in devasdhanam board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X