"இந்தியர்கள் எல்லாரும் சோம்பேறிகள்.." வாயை விட்டு வாங்கிக் கட்டி கொண்ட அமெரிக்க சுற்றுலா பயணி
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் சில நேரம் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிடுவார்கள். அப்படித் தான் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி இப்போது வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் இந்தியர்களைச் சோம்பேறிகள் என்றும் உடல் தகுதி இல்லாதவர்கள் என்றும் சொல்லியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் இந்தியாவின் பிரம்மாண்டத்தை வியந்து பார்க்கிறார்கள். அதேநேரம் அவர்கள் சொல்லும் கருத்துகள் சில நேரம் சர்ச்சையாகிறது. அப்படித் தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்க வந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணி சொல்லியிருக்கும் சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளது.

அமெரிக்கச் சுற்றுலாப் பயணி
சார்லி எவன்ஸ் என்ற அந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணி, இந்தியர்களை 'சோம்பேறிகள்' என்றும் சீரற்ற உடலைக் கொண்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு எவன்ஸ் சென்ற நிலையில், அங்கு தான் அவர் இதுபோன்ற கருத்துகளைச் சொல்லி வீடியோ எடுத்துள்ளார்.
சோம்பேறிகள்
அந்த ஆம்பர் கோட்டைக்குச் செல்லும் பாதை செங்குத்தானதாக இருக்கும். அந்தப் பாதையில் சில இந்தியச் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தனர். ஒரே நேரத்தில் அவ்வளவு தூரம் ஏற முடியாது என்பதால் அவர்கள் சற்று ஓய்வெடுத்துள்ளனர். அவர்களைச் சுட்டிக்காட்டியே இந்தியர்கள் சோம்பேறிகள் என அவர் சொல்லி இருக்கிறார்.
ஆம்பர் கோட்டையைச் சுற்றிப் பார்க்கக் காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் இந்தியர்கள் பலரும் கோட்டை உச்சிக்குச் செல்லாமல் வழியிலேயே உட்கார்ந்துவிடுவதாக அவர் சொல்கிறார். வழியிலேயே புகைபிடித்துக் கொண்டும் அல்லது டீ, காபி, கூல் டிரிங்க்ஸ் குடித்து நேரத்தைக் கழித்ததாகக் குற்றம் சாட்டினார். இந்தியர்கள் முயற்சி முடிப்பதில்லை என்றும் எவன்ஸ் கூறுகிறார்.
டிரெண்டிங்
இது வெறும் 20 நிமிடப் பயணம் தான் என்றும் ஆனால், அதையே பலரும் நிறைவு செய்யவில்லை என்றும் எவன்ஸ் கூறினார். மேலும், டிக்கெட் எடுத்த பிறகும் இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதே அவர்கள் கேள்வியாக இருப்பதாகவும் கூறினார். இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நான் சொன்னதை இதெல்லாம் உறுதி செய்கிறது என்றும் எவன்ஸ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வெளியாகிக் குறுகிய நேரத்தில் இது டிரெண்டானது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களை இன்ஸ்டாகிராமில் பெற்றது. இதற்கு நெட்டிசன்கள் மிகக் கடுமையாகப் பதிலடியைக் கொடுத்து வருகிறார்கள்.. யாரோ சிலர் நடக்க யோசிக்கிறார்கள் என்பதை வைத்து இந்தியர்களே சோம்பேறிகள் எனச் சொல்வதை ஏற்க முடியாது என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் பதிலடி
ஆம்பர் கோட்டையின் செங்குத்தான பாதை அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது என்றும் வயது, உடல்நலம், வானிலை எனப் பல விஷயங்களை நாம் இதில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இன்னும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
அதேநேரம் எல்லாருமே அவர் சொல்வது தவறு எனச் சொல்லவில்லை. நமது நாட்டில் உடற்தகுதி, உடற்பயிற்சி புறக்கணிக்கப்படுவது உண்மை தான் எனச் சில இந்தியர்கள் பதிவிட்டுள்ளனர். எவன்ஸ் சொல்வதைக் கேட்க வருத்தமாக இருந்தாலும் கூட அதுதான் உண்மை என இந்தியர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் இந்தியர்கள் உணவு, வாழ்க்கை முறை தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
சில இந்தியர்கள் எவன்ஸின் கருத்துகளுக்கு வலுவாக மறுப்பு தெரிவித்தனர். சிகரெட்டுகள், குளிர்பானங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே வெளிநாட்டவர் தான் எனச் சாடினர். மேலும், இந்தியர்களின் உத்தரகண்ட் போன்ற மலைப் பிரதேசங்களுக்குச் சென்று உள்ளூர் மக்களைப் பார்த்தால் இந்தியர்கள் சோம்பேறிகளா என்பது தெரிந்துவிடும் என்று பதிவிட்டனர். இன்னும் சிலர் அமெரிக்கர்கள் தான் சோம்பேறிகள் எனச் சொல்லிப் பல உதாரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications