For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் காட்டு யானை மிதித்து குஜராத் தம்பதியர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பத்தனம் திட்டா: முல்லைப் பெரியாறு அணை அருகே கெவி வனப் பகுதியில், கேரள வனத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் தம்பதியர் காட்டு யானை மிதித்து உயிரிழந்தனர்.

அகமதாபாத் நகரை சேர்ந்த ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் அங்குள்ள சிலரை கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள பயண ஏற்பாட்டாளர் மூலம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தது.

Tourist couple from Gujarat killed by elephant in Kerala

இந்த குழுவில் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் வந்த சிலர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள காவி வனப்பகுதியை ஒரு வழிகாட்டியுடன் இன்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் வந்த ஒரு யானை ஜகரத்தி ரக்வால் என்ற பெண்ணை தும்பிக்கையால் தாக்கி வீழ்த்தியது. பின்னர் மிதித்த அந்த யானை ஆக்ரோசமாக அவரது கணவரான உபேந்திரா ராவலை துரத்திக் கொண்டு ஓடியது. பின்னர் அவரையும் கீழே தள்ளி கால்களால் மிதித்து கொன்றது.

பலியான உபேந்திரா ராவல்(52), ஜகரத்தி ராவல்(50) ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பத்தனம் திட்டா மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

English summary
A couple from Gujarat was today killed by a wild elephant while on a forest trekking at Gavi in Kerala's Pathanamthitta district, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X