டோணிக்கு காதலி இருந்தார்.. கார் விபத்தில் இறந்தார்.. அதிர்ச்சி தகவலோடு வெளியாகிறது பாலிவுட் சினிமா
மும்பை: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான டோணிக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
டோணியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி' என்ற படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் தன்னுடைய காதலியின் நினைவுகளை படமாக்க இயக்குநர், நீரஜ் பாண்டேவுக்கு டோணி அனுமதி தந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டோணியின் 20 வயதையொட்டிய காலகட்டத்தில், அவர் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்ததாக அந்த படத்தில் காட்சி உள்ளதாம்.
2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய ஏ அணியில் இடம் பெற்ற டோணி ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் சுற்றுப் பயணம் சென்றார். காதலியின் கடைக்கண் பார்வை பட்டதாலோ என்னவோ, அத்தொடர் முழுவதும் டோணி மிக சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் தொடர் முடிந்து வீடு திரும்பியதும்தான் டோணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சாலை விபத்தில் பிரியங்கா உயிரிழந்தார் என்ற தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த டோணி பல மாதங்களாக தன்னுடைய காதலியின் நினைப்பில் இருந்துள்ளார். இந்த காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளதாக மும்பை மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
டோணியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துவிடுமோ என்ற ஆதங்கத்தில் அவரது குடும்பத்தார் இருந்துள்ளனர். இருப்பினும், சோகத்தை வென்று எழுந்த டோணி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதன் விளைவாக, 2004ம் ஆண்டு வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசி உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
இதன்பிறகு டோணி வாழ்க்கையில் தொட்டதொல்லாம் துலங்கியது. கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்திய டோணி, டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டு கலக்கினார். 2010ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்தார் டோணி.
டோணி வாழ்க்கை குறித்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஏற்படுத்த உள்ள பரபரப்பால், அதன்பிறகு டோணியின் விளம்பர மார்க்கெட் தேவை இன்னும் அதிகமாக உயரும் என்று கார்பொரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications