For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனியும் ஏமாற வேண்டாம்.. இணையதள சமநிலையை சரி செய்ய டிராய் மும்முரம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இனியும் ஏமாற வேண்டாம்.. இணையதள சமநிலையை சரி செய்ய டிராய் மும்முரம்!- வீடியோ

    டெல்லி: இணைய சமநிலை குறித்த டிராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் பரிந்துரைகள் போட்டியாளர்களுக்கு ஏமாற்று வேலைகளுக்கு, செக் வைப்பதாக அமைந்துள்ளன.

    இதுகுறித்து, இந்திய இணையம் மற்றும் மொபைல் அமைப்பின் (Internet & Mobile Association of India(IAMAI)) அமைப்பின் தலைவர் சுபோ ராய் கூறியுள்ளதாவது:

    நீங்கள் எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா, நீங்கள் விரும்பும் டிவி சேனலுக்கு பதிலாக வேறு சேனலைத்தான் உங்கள் ஸ்மார்ட் போன் இணைய இணைப்பில் இருந்து ஓபன் செய்ய முடிகிறது என்பதை? நீங்கள் கவனித்துள்ளீர்களா, புதிதாக தொடங்கப்பட்ட ஒரு ஆன்லைன் வணிக நிறுவன வெப்சைட்டை திறக்க முற்படும்போது, மற்றொரு முன்னணி வெப்சைட்டைதான் ஓபன் செய்ய முடிகிறது என்பதை? இதுதான் இணைய சமன் இல்லாத நிலை எனக்கூறப்படுவது.

     இணைய சமன்பாடு

    இணைய சமன்பாடு

    நீங்கள் இணையதளத்திற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளீர்கள். நீங்கள் விரும்புவதை பார்க்க நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது இணைய சமநிலை ஆங்கிலத்தில், 'Net Neutrality'. இணையம் என்பது பொதுவானது. இது வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் இணைப்பு போன்றது இல்லை.

     சுதந்திரம் அடிப்படை உரிமை

    சுதந்திரம் அடிப்படை உரிமை

    நமது அரசியல் சாசனத்தில் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக கூறப்பட்டுள்ளது. எனவே, இணையதளத்திற்கும் அந்த அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டியது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அவசியமான ஒன்றாகும்.

     சில வெப்சைட்டுகளில் வேகம்

    சில வெப்சைட்டுகளில் வேகம்

    இணைய சமதளமற்ற நிலை என்பது, சில வெப்சைட்டுகளை மட்டும் வேகமாக திறக்க வழி செய்வது, புரமோஷன் செய்வது அல்லது அளவான பயன்பாடுக்கு மட்டும் வகை செய்வது ஆகியவைதான். இணைய உலகில் அமெரிக்காவில் ஜலதோஷம் பிடித்தால், இந்தியாவில் தும்மல் ஏற்படும். அதுவும் ஒரே நேரத்தில்.

     அமெரிக்காவிலும் போராட்டம்

    அமெரிக்காவிலும் போராட்டம்

    அமெரிக்காவிலும் இதுபோன்ற இணையதள சமன்பாடு பிரச்சினை உள்ளது. சிறு வெப்சைட் நிறுவனங்கள், குடிமை சமூகத்தினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அமெரிக்காவில் இது மக்களின் உரிமை மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில், சிறு நிறுவனங்களை கழுத்தை நெரிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது.

     டிராய் ஒழுங்குமுறை

    டிராய் ஒழுங்குமுறை

    அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒபாமா, இந்த விஷயத்தை சரி செய்ய மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார். இந்தியாவில் தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு டிராய் இந்த விஷயத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. கட்டண அடிப்படையில் இணைய சுதந்திரத்தை வரையறுக்க கூடாது என ட்ராய் கூறியுள்ளது.

     பரிந்துரைகள்

    பரிந்துரைகள்

    இணைய சமதன்மையை பராமரிக்க ட்ராய் சில பரிந்துரைகளை உருவாக்கியுள்ளது. இணையத்தில் எந்த ஒரு பாரபட்சமும் இருக்க கூடாது. டெலிபோன் நிறுவனங்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அதிகபட்ச அளவுக்கு வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கை பயன்படுத்த வழி செய்து தர வேண்டும். அதேநேரம், இணைய சமான்பாட்டில், நெருக்கடிக்கு வழியின்றி, சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் இயற்றுவதைவிட இவ்வாறு டிராய் ஒழுங்குமுறையை ஏற்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் வசதியானது. இவ்வாறு இந்திய இணையம் மற்றும் மொபைல் அமைப்பின் (Internet & Mobile Association of India(IAMAI)) அமைப்பின் தலைவர் சுபோ ராய் தெரிவித்துள்ளார்.

    English summary
    In India things turned out to be more nuanced. TRAI recently came up with a set of recommendations which among other things ensures: a) there is no discrimination of what you access on your internet, b) telcos have been given reasonable freedom to optimize their networks and c) important exceptions have been carved out not to make net neutrality too stifling. More importantly, it seems to me that the telcos have given up their fight, large internet companies have found other ways of increasing traffic and users are just happy that they TRAI has reiterated the principle of free and open access, writes, Subho Ray.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X