திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருநங்கைகள் சேலை அணியக் கூடாது என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இவர் ராஜ்யசபா எம்பியாகவும் மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருநங்கைகள் ஆண்களோ அல்லது பெண்களோ இல்லை. அவர்கள் மனிதர்கள் தான் என்றார்.

ஏன் சேலை அணிய வேண்டும்?

ஏன் சேலை அணிய வேண்டும்?

பெண்ணாக இல்லாத போது அவர்கள் ஏன் சேலை அணிய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அதற்கு பதில் அவர்கள் பேன்ட், சட்டை அணியலாம் என்றும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

ஆண்களுக்கான உடை

ஆண்களுக்கான உடை

திருநங்கைகள் ஆண்களுக்கான உடையைதான் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார். திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த கருத்தை தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சேலை அணிய கூடாது

சேலை அணிய கூடாது

திருநங்கைகள் சேலை அணிய கூடாது என்பது தனது கருத்து என்றும் அவர் கூறினார். இந்தியாவில், 6 லட்சம் திருநங்கைகள் உள்ளனர் என்ற ராம்தாஸ் அத்வாலே அவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் பேச்சால் சர்ச்சை

அமைச்சர் பேச்சால் சர்ச்சை

திருநங்கைகள் சேலை அணியக் கூடாது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடை அணிவது அவரவர் விருப்பம் என திருநங்கைள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union minister of state for social justice and empowerment Ramdas Athawale said that no individual from the transgender community in the country should wear a saree.
Please Wait while comments are loading...