For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமை தடையல்ல... உ.பியில் சிபிஎஸ்சி +2 தேர்வில் 94% மதிப்பெண்கள் பெற்ற டாக்சி டிரைவரின் மகள்

Google Oneindia Tamil News

நொய்டா: உ.பியில், 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் டாக்சி டிரைவரின் பெண் ஒருவர் சுமார் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

வறுமை ஒரு போதும் திறமைகளை தடுத்து விட முடியாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் நொய்டவைச் சேர்ந்த நேகா. தந்தையோ டாக்சி டிரைவர். உடன் பிறந்த ஆறு பேரைக் கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக இருப்பவர் தான் நேகாவின் தாய்.

ஆனபோதும், குடும்பத்தின் வருமை தனது கல்வியைப் பாதித்து விடாமல் கவனமாக படித்து பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 94.2 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார் நேகா.

தனது வெற்றிக்கான காரணம் குறித்து நேகா கூறுகையில், ‘அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என நான் கனவு கண்டேன். தற்போது அதனை சாதித்தும் விட்டே. என் வெற்றிக்கு முக்கிய காரணம் எனது கடின உழைப்பும், மற்றவர்களின் ஆசிர்வாதமும் தான். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்' என மற்ற மாணவர்களுக்கு அறிவுரை கூறுகிறார் நேகா.

மகளின் தேர்ச்சி விகிதத்தால் பூரித்துப் போயிருக்கும் அவரது தந்தை, ‘எங்கள் வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டாலும் கூட குழந்தைகள் படிப்பதை நிறுத்தக் கூடாது என உறுதியுடன் இருக்கிறேன். நேகா என்னவாக ஆசைப் படுகிறாளா அதனை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The Central Board of Secondary Education (CBSE) Class XII results were announced on Thursday with several students scoring exceedingly well. But there is one story that stands out and that is Neha's, who scored 94.2 per cent in the exams and her father, a truck driver, couldn't be more proud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X