இரட்டை இலை லஞ்சம்: டெல்லி போலீஸ் "செம" பல்டி.. குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் டிடிவி தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதிய ஆதாரம் இல்லாததால் தினகரனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் டெல்லி போலீசார் திடீர் பல்டியடித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த வழக்கிலிருந்து தினகரன் தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தினகரன் தரப்புக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.

இரட்டை இலைக்காக லஞ்சம்

இரட்டை இலைக்காக லஞ்சம்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உட்பட நான்கு பேரை டெல்லி குற்றவியல் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.

திகார் சிறையில் அடைப்பு

திகார் சிறையில் அடைப்பு

இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஒரு மாதம் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

போதிய ஆதாரம் இல்லை என்பதால் குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் சேர்க்கப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

அம்மா கோஷ்டி குஷி

அம்மா கோஷ்டி குஷி

தினகரன் இந்த வழக்கிலிருந்து தப்புவதால் அதிமுக அம்மா கட்சியினர் குஷியடைந்துள்ளனர். தினகரன் மீது பொய் வழக்குப் போடப்பட்டதாக கூறி பிரசாரம் செய்யவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi Police claimed that the TTV Dinakaran's name was not included in the charge sheet of the bribery case. Due to lack of sufficient evidence, Dinakaran's name was not included in the chargesheet, and the Delhi police were suddenly Changed
Please Wait while comments are loading...