போனா... வந்தா... பேசினா... செய்திதான்... நீங்க கலக்குங்க ராகுல் ஜி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அவரு யாரு தெரியுமா? ‘நின்னா தேரு... நடந்தா திருவிழா... உட்கார்ந்தா உற்சவம்... கண்ணசச்சா கட்டளை' எதுக்கு இந்த பில்டப் வசனம் என்கிறீர்களா? இது கடந்த சில நாட்களாக ராகுல்காந்தியின் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டு வருவதற்குத்தான் இந்த வசனத்தைப் போட்டோம்.

இந்தியாவின் மேப்பில் இருந்தே எஸ்கேப் ஆன ராகுல் 55 நாட்களுக்குப் பின்னர் கடந்த வாரம் நாடு திரும்பினார். ராகுல் எங்கே.... எங்கேப்பா ராகுல் என்று மிஸ்ஸிங் போட்டு தேடினார்கள். 55 நாட்களும் நாட்டில் அவர் இல்லை என்றாலும் அவரைப்பற்றிய பேச்சாகவே இருந்தது.ராகுல் காந்தி இந்தியாவின் 'கேப்டன் விஜயகாந்த்' என்று சொல்லும் அளவுக்கு அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.

இன்றைய சூழ்நிலையில் ராகுல் எது செய்தாலும், எதுவுமே செய்யாவிட்டாலும் அது செய்திதான் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில், 56 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பிய ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ராகுல் ரிட்டன்ஸ்

ராகுல் ரிட்டன்ஸ்

அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், #ராகுல் ரிட்டன்ஸ் என டிரெண்டானது. அதற்கும் ஒரு ஜோக் அடித்தார்கள் ட்விட்டர்வாசிகள். டோமினோஸ் பீட்ஸா நிறுவன கிளை மேலாளரை தொலைபேசியில் அழைத்த ராகுல் காந்தி அவரிடம் சத்தம் போட்டுள்ளார். முட்டாள், இப்போதுதான் உங்களது டெலிவரி பாயிடமிருந்து பீட்ஸா வந்தது. அதில் சீஸ் இல்லை, டாப்பிங் இல்லை, எதுவுமே இல்லை. வெறும் பிரெட் மட்டுமே இருக்கிறது. என்னாச்சு உங்களுக்கு. உங்க எல்லா கடைகளையும் மொத்தமாக மூடப் போறேன். அத்தனை பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். 10 நிமிடம் கழித்து கிளை மேலாளருக்குப் போன் செய்த சோனியா காந்தி, அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கூறுகையில், ஸாரி தப்பா நினைச்சுக்காதீங்க. அவன் டப்பாவை தலைகீழா திறந்துட்டான் எந்று கூறினாராம். இந்த காமெடி ட்விட்டரில் கலக்கியது.

விவசாயிகள் மாநாடு

விவசாயிகள் மாநாடு

இந்தியா திரும்பியதுமே ராகுல்காந்தி கடந்த 19ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் மாநாட்டை தலைமையேற்று நடத்தினார். வழக்கம்போலவே, கிசான் மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார் ராகுல் என கிசான் ஜாம், சாஸ் பாட்டில்கள் படத்தைப் போட்டு கலாய்ப்புடனேயே தொடங்கியது.

ராகுல் கர்ஜணை

ராகுல் கர்ஜணை

விவசாயிகள் பேரணியில் பேசிய ராகுல் "மக்களவைத் தேர்தலின்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மோடி அரசு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டு வருகிறது. தேர்தலின்போது மோடி தொழிலதிபர்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனாக வாங்கினார். அதை இப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும். எனவே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அதற்கு பலிகடா விவசாயிகள்தான் என்றார் ராகுல்.

பலவீனமாக கட்டிடம்

பலவீனமாக கட்டிடம்

குஜராத் மாதிரி ஆட்சி நிர்வாக முறை மூலமாக விவசாயிகளின் நிலத்தை எளிதாக பறிக்கமுடியும் என்பதை நிரூபித்த மோடி இப்போது நாடு முழுவதும் அதை செய்ய முடியும் என தொழிலதிபர்களுக்கு உறுதி கொடுத்துள்ளார். அடித்தளம் பலவீனமாகி கட்டிடம் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் அதன் மீது ஏணி சாத்தி வெள்ளை பூசி கட்டிடம் பளபளக்கிறது என்று காட்டுவதுதான் குஜராத் மாதிரி வளர்ச்சி" என பேசினார்.

ராகுல் ராக்ஸ்

ராகுல் ராக்ஸ்

விவசாயிகள் மாநாட்டில் பேசிய உடனேயே '#ராகுல் ராக்ஸ்' ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. அட, ராகுலை மவுனியாக, பிதற்றல்காரராக விமர்சிக்கும் எதிர்ப்பாளர்கள்கூட ராகுல் ஏதோ பேசியிருக்கிறார் என்ற தொணியில் #பப்புமியாவ் என பதிவிட்டனர். டெல்லி மாநாட்டில் ராகுல் முழங்கியதாக ஊடகங்களில் பேசப்பட்டன.

விழித்தெழுந்த ராகுல்

விழித்தெழுந்த ராகுல்

ராகுல் நாடு திரும்பிய சில தினங்களில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் தூங்கியதால் சர்ச்சைக்குள்ளான ராகுல் நடப்புத் தொடரில் தனது இன்னொரு முகத்தை அடையாளப் படுத்தத் துவங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.

பிரதமருக்கு ஆலோசனை

பிரதமருக்கு ஆலோசனை

ஏப்ரல் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தல் தனது வழக்கமான மேனரிசத்துடன் கலக்கலாக தொடங்கிய ராகுல், "பிரதமர் மோடிக்கு ஓர் ஆலோசனை சொல்ல விரும்புகிறேன் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடமிருந்து மோடி தனது பார்வையை விவசாயிகள், தொழிலாளர்கள் பக்கம் திருப்ப வேண்டும். அப்படித் திருப்பினால் மக்கள் தொகையில் 67 சதவீதம் உள்ள விவசாயிகளால் அவருக்கு அரசியல்ரீதியான பலன் கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்களை புண்படுத்தியதன் மூலம் நீங்கள் பெரும் தவறு செய்துவிட்டீர்கள். பதிலுக்கு வரும்காலத்தில் அவர்கள் உங்களைப் புண்படுத்துவார்கள். உங்களின் பார்வையை மாற்றிக் கொண்டால் அது உங்களுக்குப் பலனளிக்கும். அதன் மூலம் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.

ஒபாமா ஜி.... மோடி ஜி

ஒபாமா ஜி.... மோடி ஜி

இதேபோல தனது வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் கலாய்த்தல் பாணிக்கு மாறிய ராகுல் காந்தி, ஒபாமா பாராட்டை கையில் எடுத்தார். "பிரதமர் மோடியை பாராட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட குறிப்புரை எழுதியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரை குறித்தும் அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வளவு பாராட்டி புகழ்ந்து எழுதியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிச்செல் கோர்பசேவை அப்போதைய அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். மிச்செல் கோர்பசேவ் அதிகாரத்தின் கீழ்தான் சோவியத் ரஷ்யா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்த கோர்பசேவை அமெரிக்க அதிபர் பாராட்டியதுக்கு இணையானதே ஒபாமா மோடியை பாரட்டியதும்" என்று வஞ்சப்புகழ்ச்சியை உள்ளே நுழைத்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெட் வீசிய ராகுல்

நெட் வீசிய ராகுல்

நெட் நியூட்டிராலிட்டி குறித்து பேசிய ராகுல் காந்தி, பெரிய நிறுவனங்கள் இடையே இன்டர்நெட்டை விற்பனை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. நெட் நியூட்ராலிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடிக்கணக்கானோர் போராடுகின்றனர். ஆனால் அரசு இன்டர்நெட்டை பிடுங்கி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையில் கொடுக்க முயற்சி செய்கிறது. நெட் நியூட்ராலிட்டி விவகாரத்தில் சட்டத்தை மாற்றுங்கள். இல்லை எனில் புதிய சட்டத்தை உருவாக்குங்கள் என்றார்.

அரசியல் பாடம் எங்கே படித்தார்

அரசியல் பாடம் எங்கே படித்தார்

இப்படி ராகுலின் பேச்சு நாளுக்குநாள் மெருகேறி வருவது அவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதாகவே உள்ளது எனலாம். 55 நாட்கள் விடுமுறையில் ராகுல்காந்தி தியானம் படிக்க போனதாக சொன்னாலும் இந்த விடுமுறையை அவர் பாலிடிக்ஸ் பாடம் படிக்க பயன்படுத்திக்கொண்டதாகவே தெரிகிறது... எங்கே போய் படிச்சிட்டு வந்தீங்க ராகுல் ஜி... அதையும் சொன்னா நல்லா இருக்குமே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+