நடிகர் ராபின் வில்லியம்ஸ் விவகாரம்: இறந்தவர்களின் போட்டோக்களை அகற்றும் ட்விட்டர்
டெல்லி: இறந்தவர்களின் புகைப்படங்களை நீக்குமாறு அவர்களின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் நீக்கப்படும் என்று ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்ததையடுத்து அவரின் புகைப்படங்களில் சில மாற்றங்களை செய்து அதை பலர் ட்விட்டரில் வெளியிட்டனர். இதை பார்த்து வேதனை அடைந்த அவரின் மகள் ஜெல்டா வில்லியம்ஸ் ட்விட்டரில் இருந்தே வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்த மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை தனது இறந்த தந்தையின் பெயரைக் கெடுப்பது போன்று உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ட்விட்டரில் உள்ள இறந்தவர்களின் புகைப்படங்களை நீக்குமாறு அவர்களின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் அவை நீக்கப்படும்.
அவ்வாறு இறந்தவர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ட்விட்டரில் இருந்து அகற்ற விரும்புவோர் அதற்கான கோரிக்கையை
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலித்து அதன் தன்மையை உணர்ந்து செயல்படுவோம். அதே சமயம் அனைவரின் கோரிக்கைகளையும் ஏற்க முடியாமல் போகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications