ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 5 மணி முதல் அந்தப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Two soldiers and two terrorists killed in Jammu Kashmir encounter

அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.ஜின் பகுதியில் 8 தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நெருங்கி விட்டதாகவும், என்கவுன்ட்டர் தொடர்ந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An encounter broke out on Wednesday between security forces and militants in the Hajin area of Bandipora in Jammu and Kashmir. Two soldiers and two terrorists killed in Jammu Kashmir encounter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற