For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி, பெங்களூர், கொல்கத்தாவில் இனி உபேர் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தலாம்!

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: உபேர் டாக்சி நிறுவனம் டெல்லி, பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் மட்டும் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும் திட்டத்தை துவங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் நிறுவனம் இந்தியாவிலும் டாக்சிகளை இயக்கி வருகிறது. டெல்லியில் உபேர் டாக்சி டிரைவர் பெண் பயணியை பாலியல் பலாத்காரம் செய்ததையடுத்து டெல்லியில் உபேர் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

Uber starts cash payment in Delhi, Bangalore, Kolkata

உபேர் டாக்சிகளில் சென்றால் அதற்குரிய கட்டணத்தை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைனில் உபேர் வாலெட் மூலமே செலுத்த முடியும். இந்தியாவில் உபேர் டாக்சி நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போயுள்ள நிலையில் அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது டெல்லி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டும் உபேர் டாக்சி கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து உபேர் நிறுவனத்தின் பெங்களூர் பிரிவு பொது மேலாளர் பவிக் ராத்தோட் கூறுகையில்,

கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நினைத்த நேரத்தில் டாக்சி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

English summary
Uber has introduced cash payment option in Delhi, Bangalore and Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X