For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் பிரதமர் மன்மோகன்சிங்!!

By Mathi
|

டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று நேரில் கொடுத்தார்.

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடைசி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடுகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PM Manmohan Singh submits his resignation to President at Rashtrapati Bhavan

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும் தற்போதைய 15வது லோக்சபாவை கலைக்கவும் ஜனாதிபதிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PM Manmohan Singh submits his resignation to President at Rashtrapati Bhavan

அதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு பிரதமர் மன்மோகன்சிங் சென்றார். அங்கு தமது மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மன்மோகன்சிங் கொடுத்தார்.

அப்போது புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால பிரதமராக இருக்குமாறு மன்மோகன்சிங்கை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

English summary
PM Manmohan Singh submits his resignation to President Pranab Mukherjee, is asked to stay on as care taker PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X