நர்மதை நதி பாதுகாப்பு இயக்கத்தில் தீவிர பங்காற்றியவர் தவே

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: உடல்நல குறைவால் காரணமாக காலமான மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே, நர்மதை நதி பாதுகாப்பு இயக்கத்தில் தீவிரமாக பங்காற்றினார்.

கடந்த 1956-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் பிறந்தவர் அனில் மாதவ் தவே (60). இவர் மத்திய சு்ற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து தமிழக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

Union Environment Minister Anil Madhav Dave dead

இதுகுறித்து இறுதி முடிவை எடுக்க அமைச்சர் தவே மிகுந்த காரணமாக இருந்தார். அதேபோல் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியை பாதுகாப்பதற்காக செயல்திட்டத்தை தொடங்குவதில் மிகுந்த பங்காற்றினார். உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் உடல் நலக் கோளாறு காரணமாக இன்று மறைந்தார். அவரது இறப்பு தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பிரசாரகராகவும் தவே இருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Anil Madhav Dave had done important role in Narmada river protection movement.
Please Wait while comments are loading...