For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிக்கணக்கில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கும் மக்கள்.. உ.பியில் அதிர வைக்கும் எதார்த்த நிலை!

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியிருந்தார். ஆக்சிஜன் இல்லை என்று பொய்யாக கூறும் மருத்துவமனைகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று மாநில அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உண்மை நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

UP CM says no shortage...People waiting for hours - the real situation

அம்மாநிலத்தில் உள்ள கான்பூர் நகர் உர்சுலா ஹோர்ஸ்மன் நினைவு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார் அனில் நிகம் மருத்துவமனையின் சூழ்நிலை பற்றி கூறியுள்ளார். வியாழக்கிழமை அன்று இம்மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் யூனிட் அமைக்கப்பட உள்ளது. இதுவரை கடவுளின் புண்ணியத்தால் நாங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்திக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் 15 நிமிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வராமல் போனதால் ஏற்பட்ட விளைவுகளை இம்மாநிலம் சந்தித்துள்ளது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 முதல் 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என்று அனில் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியிருந்தார். திங்கள் கிழமை அன்று மாநில அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது என்றும் கூறினார். எப்படியோ, ஆரம்பத்தில் மருத்துவமனையில் குடும்பத்துடன் வந்து சிகிச்சை பெரும் அழுத்தம் தற்போது குறைந்துள்ளது. ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருந்து கடைகளில் இந்த அழுத்தம் தற்போது அதிகரித்துள்ளது என்று கூறினார் அனில்.

உர்சுலா மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையம் கிடையாது. ஆனால் திங்கள் கிழமை மதியம் என்று எடுத்துக் கொண்டால் இங்கே 35 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை இருக்கும் பகுதிகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது அவர்கள் படுக்கை வசதிகள் இல்லை என்றாலும் கூட அங்கிருந்து நகர்வதில்லை. எங்களின் மருத்துவமனையில் பணியாற்றும் 7-8 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. சனிக்கிழமை இரவு எங்கள் செவிலியர் ஒருவர் பலியானார் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே. சர்மா, எப்போதும் மருத்துவமனையில் அனுமதி வேண்டி இரண்டு மூன்று நோயாளிகள் காத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாது என்றவுடன் அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

கான்பூர் ஹாலெட் மருத்துவமனையில் 8 வார்டுகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மருத்துவர் எட்டு வார்டுகளையும் கவனித்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். தன்னுடைய அடையாளத்தை வெளியிடாத அவர், 80 நோயாளிகள் அங்கே உள்ளனர். 8 பேருக்கு நோய் தொற்று உறுதி ஆகியுள்ளது. மீதம் பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லை. அவர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு ஆக்சிஜன் பிரச்சனை இல்லை. ஆனால் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் இரண்டு நோயாளிகள் ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அந்த மருத்துவர் கூறினார்.

அரை மணி நேரத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்த தந்தை புத்திலாலுக்கு அருகே நின்றிருந்த ராகுல் குமார், முதலில் தாங்கள் ஹாலெட் மருத்துவனைக்கு சென்றதாக கூறினார். உன்னாவிற்கு அருகில் இருந்து வந்த அவர்களை மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது ஹாலெட். ஆனால் புத்திலாலுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருப்தி இல்லாமல் போகவே வீடு திரும்பினர். ஆனால் புத்திலாலுக்கு மீண்டும் உடல்நிலை மோசம் அடைய மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
எந்த தனியார் மருத்துவமனையும் அவரை அனுமதிக்கவே இல்லை. இதுவரை அவருடைய கொரோனா சோதனை முடிவுகள் எங்கள் கைக்கு வரவில்லை. அவருடைய உடலை எடுத்து செல்லுங்கள், அவருடைய சிகிச்சை முடிவுகள் காணமல் போய்விட்டது என்று கூறினார். ஒன்று கொரோனா சோதனை செய்யாமலே அவர் உடலுக்கு சிதையூட்ட வேண்டும் அல்லது 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று கூறினார் குமார்.

ஹாலெட் மருத்துவமனை முதல்வர் ஆர்.பி. கமல், மாவட்ட சி.எம்.ஓ அனில் மிஸ்ரா மற்றும் ஆட்சியர் அலோக் திவாரி இது தொடர்பாக அழைக்கப்பட்ட போன்கால்களை நிராகரித்துவிட்டனர்.

ஹாலெட் மருத்துவமனையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில், மாலை 4-5 மணியளவில் பப்பர் மருத்துவ ஆக்சிஜன் சப்ளை நிறுவனத்துக்கு வெளியே ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு 45-50 நிமிடங்களுக்கும், பிரதான வாயில் திறந்து 24 பேரை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வீட்டிலும் நோயாளிகள் உள்ளார்களே. இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தன்னுடைய தாயை வீட்டில் வைத்து கவனித்து வரும் அவனிஷ் சுக்லா அதிகாலை 8 மணியில் இருந்து வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார். 10 மருத்துவமனைகளில் அவருடைய அம்மாவை சிகிச்சைக்கு அனுமதிக்க முயன்று தோற்றதால் தற்போது வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

எந்த ஒரு நபருக்கும் மருத்துவ ஆக்சிஜனை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வழங்க கூடாது என்று அரசு அறிவித்த நிலையில் மக்களைத் தடுக்க முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை ஆக்சிஜனை தினமும் விநியோகஸ்தர்களால் வழங்க முடிகிறது. ஆனால் மறுமுறை நிரப்ப வரும் நபர்களால் பிரச்சனை ஏற்படுகிறது.

ஒவ்வொரு முறையும் ப்ரிஸ்கிரிப்சனை பரிசோதிப்பது முடியாத காரியம். 24 தனி நபர்களுக்கும் பிறகு மருத்துவமனை ட்ரக்குகளுக்கும் நாங்கள் ஆக்ஸிஜனை வழங்குகிறோம். கொரோனா தடுப்பு மையத்தில் இருந்து ஆக்சிஜன் கேட்டு தினமும் போன் அழைப்புகள் வருகிறது. வரிசையில் நிற்பவர்கள் நாங்கள் வேறு யாருக்கோ சாதகமாக பணியாற்றுவதாக நினைக்கின்றார்கள். சில நேரங்களில் மருத்துவமனை ட்ரக்குகளுக்கு முன்பு படுத்துக் கொண்டு பிரச்சனை செய்கிறார்கள் என்று தாசில்தார் அலக் சுக்லா கூறினார். அவர்கள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தன் உறவினருக்காக ஆக்சிஜன் சிலிண்டரை பெற்ற ஒருவருக்கு அப்போது அந்த நோயாளி இறந்துவிட்டார் என்று போன் அழைப்பு வருகிறது என்றார் அவர்.

காலை 5 மணிக்கு ரமலான் நோன்பினை துவங்கிய முகமது அம்மர் 15 லிட்டர் சிலிண்டரை நிரப்ப காலையில் இருந்து காத்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் அங்கிருந்து ரிக்‌ஷாவில் ஏற அவருடைய சிலிண்டர் கீழே விழுந்தது. அதன் நாசல் உடைந்து கேஸ் லீக் ஆக ஆரம்பித்தது. பலர் தங்களின் கைகளால் அதை அடைக்க முற்பட்டனர். ஆனால் அழுத்தம் அதிகமாக இருந்தது. ஆலையில் இருந்து ஒருவர் வந்து ஆக்சிஜன் சிலிண்டர் நாசிலை சரி செய்வதற்குள் சில லிட்டர் ஆக்சிஜன் வீணானது. பல மணி நேரம் காத்திருந்து நிரப்பிய ஆக்சிஜன் வீணாகவே முகமது அம்மர் வருத்தத்துடன் அதனை எடுத்துச்சென்றார்.

செவ்வாயன்று ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய ஆதித்யநாத், பிஎம்.கேர்ஸ் நிதியின் கீழ் ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 61 திட்டங்கள் மாநில அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 32 ஏற்கனவே நிறுவப்பட்ட நிலையில், 39 திட்டங்கள் மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளதாகவும் கூறினார். ஆக்ஸிஜன் டேங்கர்களின் எண்ணிக்கையை 64 லிருந்து 84 ஆக உயர்த்தியதாகவும், மேலும் 2,000 கூடுதல் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கியதாகவும் மாநில அரசு கூறியுள்ளது. கான்பூர் நகரில் குறிப்பாக அரசு அறிக்கையின்படி, 11 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க தனியார் துறை முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Yogi Adityanath had said that there was no shortage of oxygen in Uttar Pradesh. On Monday, the state government supplied 400 oxygen cylinders to the state of Madhya Pradesh. Let us see how the real situation is in the state of Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X