உத்தரகாண்டில் தொங்கு சட்டசபையா? - ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
டேராடூன்: உத்தரகாண்டில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக வெளியாகி உள்ளன. இதில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக ஜீ நியூஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
நடந்துமுடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நூழிலையில் தான் வித்தியாசம் வரும் என தெரியவந்துள்ளது.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. உத்தரகாண்டில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஜி நியூஸ் கருத்துக்கணிப்பில் பாஜக 26-30; காங்கிரஸ் 35-40; ஆம் ஆத்மி 0, பகுஜன் சமாஜ் 2-3, மற்றவர்கள் 1-3 இடங்களைப் பெறும் என தெரியவந்துள்ளது.
உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த 14ம் தேதி தேர்தல் நடந்தது.
உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியுள்ளது பாஜக. திராத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோருக்கு பின்னர் 3 ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் தமி முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். கடந்த தேர்தலில் 70 இடங்களில் பாஜக 57 இடங்களும், காங்கிரஸ் கட்சி 11 இடங்களையும் பெற்றது.
நடந்து முடிந்துள்ள 5 மாநிலங்கள் தொடர்பான கருத்துகணிப்புகளின் அடிப்படையில் உத்தரகாண்டில் சராசரியாக பாஜக அதிகபட்சமாக 34 இடங்களைப் பிடிக்கும் என தெரியவருகிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில்
பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications