உத்தரகாண்ட்: காங்கிரஸ் விஸ்வரூபம்..பாஜகவிற்கு கடும் போட்டி..சொல்வது ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
டேராடூன்: ரிபப்ளிக் டிவி - பி மார்க் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளின் படி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 35 முதல் 39 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மணிப்பூர் கோவா உத்தரகண்ட் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்து எடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.
மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 46.51% வாக்குகளுடன் 56 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்றது. தற்போதைய முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதும் பாஜகவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவி - பி மார்க் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு வெற்றி
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போதைய தேர்தலில் 35 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 39.8 சதவீதம் ஆக இருக்கும் எனவும் ரிபப்ளிக் - பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 28 முதல் 34 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் பாஜகவை விட ஒரு சதவீதம் குறைந்து அதாவது 38.3 % ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

மீண்டும் முதல்வர்
மலைப்பாங்கான பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 0-3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி காங்கிரஸின் புவன் சந்திர கப்ரியை எதிர்த்து தனது சொந்த தொகுதியான காதிமாவில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதும் அவரே வெற்றி பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்
முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் காங்கிரஸின் மக்களின் விருப்பமான முதல்வர் முகமாக கருதப்படுகிறார். லால்குவா தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட்டிடம் சவாலை எதிர்கொண்ட நிலையில், பாஜகவால் டிக்கெட் மறுக்கப்பட்ட பவன் சவுகானையும் அவர் சுயேச்சை வேட்பாளராக எதிர்கொண்டார். அவர் இத்தேர்தலில் பலத்த போட்டியை சந்தித்துள்ள நிலையில் அவரும் வெற்றியடைய வாய்ப்புள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications