வாஜ்பாய் உடல்நலம் தேறி வருகிறது... கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை- வைகோ

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாஜ்பாய் உடல்நலம் தேறி வருகிறது- வைகோ-வீடியோ

    டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தேறி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென
    நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலில் நான் மிகவும் மதிக்கிற முதல் தலைவர் என்றால் அது வாஜ்பாய்தான். நேரு போன்ற தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

    தகவல் கொடுத்தார்கள்

    தகவல் கொடுத்தார்கள்

    ஆனால் 1978-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளில் இருந்து என் மனம் கவர்ந்த தலைவர் வாஜ்பாய். பீகார் கூட்டத்தில் என்னை அவரது வளர்ப்பு மகன் என்று சொன்னார். 1982-ஆம் ஆண்டு இதே எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பால் அனுமதிக்கப்பட்டபோது எந்த தலைவர்களுக்கும் எந்த எம்பிகளுக்கும் தெரியாது. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு தகவல் கொடுத்ததால் நான் சென்று பார்த்தேன்.

    பாதிப்பில்லை

    பாதிப்பில்லை

    தற்போது அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் நன்றாக இருக்கிறது. உடல் பரிசோதனைக்காக அவர் வந்துள்ளார். சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை.

    பிரத்யேக ஆடை

    பிரத்யேக ஆடை

    வாஜ்பாயை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பதால் அவரை பார்ப்பதற்கு பிரத்யேக ஆடை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்கள்.

    வளர்ப்பு மகளை சந்தித்தேன்

    வளர்ப்பு மகளை சந்தித்தேன்

    நான் வேண்டாம் என்று கூறிவிட்டு அவரது வளர்ப்பு மகள் நமீதாவை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். பயப்படும் அளவுக்கு அவருக்கு ஒன்றுமில்லை என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+