விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் 'மத ஆயுத குழுக்கள்'.. சொல்கிறது அமெரிக்காவின் சிஐஏ
விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவற்றை மத ஆயுத குழுக்கள் என்கிறது சிஐஏ.
Recommended Video

டெல்லி: இந்துத்துவா அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகியவை மத ஆயுத குழுக்கள் என்று அமெரிக்காவின் சிஐஏ வகைப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ சர்வதேச நாடுகள் குறித்த 'வேர்ல்ட் ஃபேக்ட் புக்' என்ற தலைப்பிலான தகவல்களை தம்முடைய இணையதளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அண்மையில் இந்தியா குறித்த தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் என்ற தலைப்பில் அதிமுக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என பல கட்சிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்ததாக அரசியல் அழுத்தம் தரும் குழுக்கள், தலைவர்கள் என ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் குரியத் மாநாட்டு கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்கிறது. பஜ்ரங்க் தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை மத ஆயுதக் குழு (militant religious organization) என வகைப்படுத்தியுள்ளது.
மதானியின் ஜாமியாத் உலெமா இ ஹிந்த் ஒரு மத அமைப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு தேசியவாத இயக்கம் என்கிறது. பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றை மத ஆயுத குழுக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதற்கு பாஜக தலைவர்களும் இந்துத்துவா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவை அல்லாமல் இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள், வெளிநாடுகளை தளமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் என்கிற பட்டியல்களையும் சிஐஏ ஃபேக்ட் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தளமாக கொண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன், இந்தியன் முஜாஹிதீன், ஐஎஸ்ஐஎஸ் ஆகியவை செயல்படுவதாகவும் அல்கொய்தா, இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்பா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவை வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications